ஆத்திச்சூடி (Aa-th-thi-ch-choo-di)

Author - எழுதியவர் -- ஔவையார் (au-vai-yaa-r)

அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
ஔவியம் பேசேல்.

  பொருள் அறிக

அறம் - நல்ல செயல்

ஆறுவது - தனிவது

சினம் - கோபம்

கரவேல் - மறக்காதீர்

ஈவது - கொடுப்பது

விளம்பேல் - சொல்லாதீர்

ஊக்கம் - முயற்ச்சி

இகழ்வேல் - வேறுக்காதீர்

ஒப்புரவு - உலகத்தாரோடு சேர்ந்து வாழ்தல்

ஓதுவது - படிப்பது

ஔவியம் - பொறாமை