வினாப்பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கள் வினாவெழுத்து என்று பெயர்.இவை சொல்லின் முதலிலும், இறுதியிலும் வரும்.
எ , யா என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும்; ஆ , ஓ என்னும் எழுத்துக்கள் சொல்லின் இறுதியிலும்; ஏ என்னும் எழுத்து சொல்லின் முதல்,இறுதி ஆகிய இருவழிகளிலும் நின்று வினாப்பொருளைத் தரும்.
சான்று :
| எது , எவன், யாது
, யாவன் |
--- > எ , யா
சொல்லின் முதலில்
வந்தன. |
| அவனா? . உண்டானா? , படித்தாளோ? | --- > ஆ , ஓ சொல்லின் ஈற்றில் வந்தன |
| ஏது? , ஏன்? | ---> ஏ சொல்லின் முதலில் வந்தது. |
| வந்தானே? , பார்த்தாயே? , சொன்னாயாமே? | --- > ஏ சொல்லின் இறுதியில் வந்தது. |
வினாவெழுத்து அகவினா, புறவினா என இருவகைப்படும்.
அகவினா :
சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வருமெனின், அவற்றிற்கு அகவினா எனப்பெயர்.
உதாரணம்:
ஏன் , எங்கு , எப்படி