ஒன்றனை
சுட்டிக்காட்ட
வரும் எழுத்திற்குச்
சுட்டெழுத்து
என்று பெயர்.
அவை அ , இ , உ என்பனவாம்.
இவை தனியாக வந்தால்
சுட்டெழுத்து
என்றும், சொல்லோடு
வந்தால் சுட்டுப்பெயர்
என்றும் கூறுவர்.
உதாரணம்:
அ , இ , உ -> சுட்டெழுத்து
அவன் , இவன் ,உவன்
அவள் , இவள் , உவள்
-> சுட்டுப்பெயர்.
சுட்டெழுத்து இரண்டு வகைப்படும். அவை அகச்சுட்டு, புறக்சுட்டு ஆகும்.
அகச்சுட்டு
:
சொற்களின்
உள்ளேயே சுட்டெழுத்து
அடங்கி வருவது
அகச்சுட்டு.
உதாரணம் : அவன்,இவன்
புறச்சுட்டு:
சொற்களின் புறத்தே (வெளியே) இச்சுட்டு னிற்குமெனின், அவற்றுக்குப் புறச்சுட்டு எனப்பெயர்.
உதாரணம்: அப்பையன்,
இப்பையன்
இச்சுட்டெழுத்துக்களுள் அ , இ மட்டும் தற்கால வழக்கில் உள்ளன. உ என்னும் சுட்டெழுத்து சன்க காலத்தில் இறுந்தது, தற்பொழுது மறைந்துவிட்டது.