Reading Comprehension--> பசுவும் கன்றும்
Read and answer the question.
தோட்டத்தில் மேயுது
வெள்ளை பசு - அங்கே
துள்ளி குதிக்குது
கன்று குட்டி.
அம்மா என்குது
வெள்ளை பசு - உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக் குட்டி.
நாவால் நக்குது
வெள்ளை பசு - பாலை
நன்றாய் குடிக்குது
கன்றுக் குட்டி.
முத்தம் கொடுக்குது
வெள்ளை பசு - மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி.
எழுதியவர் -- கவிமணி தேசிகம் விநாயகம் பிள்ளை

பின்வரும் கேள்விக்கு பதில் அளிக்கவும்.